Wednesday, May 16, 2012

சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!

சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!: (இது ஓர் உண்மைச் சம்பவம்) வீடிழந்து, வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து... வாழ்க்கை வண்டியை ஓட்...

Thursday, March 22, 2012

அம்மா


என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை  .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள்  நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்

Tuesday, August 17, 2010

விரும்புகிறேன்...! - காதல் கவிதை

விரும்புகிறேன்...! 

மண்ணாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கால்தடம் என் மீது பதிவதற்காக...

பொன்னாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கழுத்தில் நான் மின்னுவதற்காக...

காற்றாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் மூச்சுக்காற்றோடு கலப்பதற்காக...

கடவுளாய் இருக்க விரும்புகிறேன்...!
எந்த நேரத்திலும் உன்னை காண்பதற்காக ...!
பெண்ணே...!

தொலைபேசியில் முத்தம் தராதே - காதல் கவிதை

தொலைபேசியில் முத்தம் தராதே 

தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே,
அது,
உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு,
வெறும் சத்தத்தை மட்டுமே,
எனக்கு தருகிறது...

காதலின்  

காதலின் இனி"மை"
சொர்க்கத்தை விட மேலானது...!

காதலின் கொடு"மை"
நரகத்திற்கு ஈடானது...!

காதலின் தனி"மை"
எவருக்கும் புரியாதது...!

காதலின் பொறு"மை"
இப்பூமிக்கு ஈடானது...!

உன் சிரிப்பு...! - காதல் கவிதை

உன் சிரிப்பு...! 

உன் பேச்சில் என்னடி அத்தனை மயக்கம்
நான் விழுந்து விட்டேன்...!

உன் சிரிப்பில் என்னடி அத்தனை மாயம்
நான் கிறங்கி விட்டேன்...!

உன் பார்வையில் எவ்வளவு பவர்
நான் படிந்து விட்டேன்...!

உன் கண்ணசைவில் என்னடி கர்வம்
நான் கவிழ்ந்து விட்டேன்..

Monday, July 26, 2010

உதிரும் சிறகுகள்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.