Tuesday, August 17, 2010

விரும்புகிறேன்...! - காதல் கவிதை

விரும்புகிறேன்...! 

மண்ணாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கால்தடம் என் மீது பதிவதற்காக...

பொன்னாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கழுத்தில் நான் மின்னுவதற்காக...

காற்றாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் மூச்சுக்காற்றோடு கலப்பதற்காக...

கடவுளாய் இருக்க விரும்புகிறேன்...!
எந்த நேரத்திலும் உன்னை காண்பதற்காக ...!
பெண்ணே...!

தொலைபேசியில் முத்தம் தராதே - காதல் கவிதை

தொலைபேசியில் முத்தம் தராதே 

தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே,
அது,
உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு,
வெறும் சத்தத்தை மட்டுமே,
எனக்கு தருகிறது...

காதலின்  

காதலின் இனி"மை"
சொர்க்கத்தை விட மேலானது...!

காதலின் கொடு"மை"
நரகத்திற்கு ஈடானது...!

காதலின் தனி"மை"
எவருக்கும் புரியாதது...!

காதலின் பொறு"மை"
இப்பூமிக்கு ஈடானது...!

உன் சிரிப்பு...! - காதல் கவிதை

உன் சிரிப்பு...! 

உன் பேச்சில் என்னடி அத்தனை மயக்கம்
நான் விழுந்து விட்டேன்...!

உன் சிரிப்பில் என்னடி அத்தனை மாயம்
நான் கிறங்கி விட்டேன்...!

உன் பார்வையில் எவ்வளவு பவர்
நான் படிந்து விட்டேன்...!

உன் கண்ணசைவில் என்னடி கர்வம்
நான் கவிழ்ந்து விட்டேன்..

Monday, July 26, 2010

உதிரும் சிறகுகள்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.

மழைக்காலம் !!!

மேகம் தன் சட்டையை பிழிந்து
மென்மையான இலைகளுக்கு
தண்ணீர் கொடுக்கும்
பருவம் இங்கே ஆரம்பம் !!

காகித கப்பலை
மூழ்கடித்து,
பிரிமியர் செப்பலை
சேறாக்கி,
அழகிய ஓட்டையை
அருவியாக்கி,
ஆட்டம் போட்ட
ஞாபக ஓட்டங்கள் !!!!

தவளையின் குறட்டை
தாயின் தாலாட்டு!!!
குவளை நீர்கொண்டு
குளியல் நாடகம் !!!
கூடுதல் மழையெனில்
வகுப்புகள் மூடப்படும் !!
விடுப்புகள் விடப்படும் !

காலை பனியில்
அருகம் புல்லில்
அவள் பெயர் எழுதி
ஆசை தீர்த்த ஞாபகம்!!!

கிளையை கிள்ளிவிட்டு
நண்பனை குளிப்பாட்டும்
பழிதீர்க்கும் பட்டாளம் !!!

என் மழலையில் வந்த மழை
எதிர் மலையில் ஒழிந்துகொண்டு
ஏனோ வர மறுக்கிறது !!!!

கரைந்த நினைவு...

உனக்குள்
உள்ளாய்
உயிர்க்குரலாய்....
உயிர்க்குள்
உள்ளாய்
கருக் குயிலாய்...
பிணக்கில்
விளைந்த
ஊடலுக்காய்....
பிரிவும் உறவும்
தேடலுக்காய்....
எனக்குள்
கரைந்த
நினைவுக்காய்...
என்றும்
தவிப்பாய்....
தத்தளிப்பாய்.

Friday, July 23, 2010

காதல்.. கனவு.. கண்ணீர்..

காதல்.. கனவு.. 
கண்ணீர்.. - காதல் தோல்வி கவிதைகள்

காதல்.. கனவு.. கண்ணீர்.. 

"காதலித்து காதலித்து
கரைந்து போனவன் நான்.

காதலிக்காக

காற்றையும் பிடிக்க முற்பட்டேன்.

அனால் அவளோ

கனவாக கரைந்துவிட்டால்.

நானோ அவளது நினைவால்

கண்ணீரில் கரைகின்றேன்"

ஊமை நினைவுகள்..

ஊமை நினைவுகள்..
 - காதல் தோல்வி கவிதைகள்

ஊமை நினைவுகள்.. 

உன்னை பார்த்த விழிகள்
ஊமை ஆயின
பேசியது கண்ணீர் துளிகள்...

உன் பெயர் உச்சரித்த உதடுகள்

ஊமை ஆயின
அரும்பியது மெல்லிய புன்னகை...

உன்னை நினைத்த மனம் மட்டும்

ஊமை ஆகவில்லை
என்னோ ?
இமைகள் மூட மாறிய நினைவுகளால்.

வாழ்கை துணையாக..

பெண்ணே நீ யார்
உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன்.

உன் முகம் தெரிந்ததே

முகவரி தெரியவில்லை,

முகவரி தெரிந்தபின்

என் மனதை உனிடம் கூற முடியவில்லை,

கனவினில் வருகிறாய்,

நேரிலும் வருகிறாய்,

ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா.

நினைவுகள்

நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது .....!
-ஆனால்
நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன் ...................!

Wednesday, July 14, 2010

என் முடிவு


நாளை நான் இறந்து விடுவேன்.....
முற்றத்து மல்லிகையும் வேலியோரத்து
செவ்வரத்தையும்....
வழமை போல் பூக்கத்தான் போகின்றன...
ஆனாலும்... நான் அறிய மாட்டேன்....
மரண ஓலம்
வீட்டை நிறைக்கும்....
பொடி எப்ப எடுப்பினம்அன்புடையோரின்
அக்கறையான விசாரிப்புகளும் 
அடிக்கடி நடக்கும்.....
இதுவும் நான் அறிய மாட்டேன்.....
மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்
தூக்கணாம் குருவியும் ஒரு கணம்
எட்டிப் பார்த்துச் செல்லும்...... மறந்து விடும்...
உறவுகள் அழும்......
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....
கொஞ்சம் கொஞ்சமாய்.....
சுவரில் சித்திரமாய்.....
என் படமும் ஏறிவிடும்.....
இவையும் நான் அறிய மாட்டேன்....
ஒரு வருடம் ஆகிவிட்டால்....
எல்லோரும் எனை மறந்திடுவர்..... என்
பெயர்கூட மறந்திடுவர்
ஆனாலும்
எனக்காக
எங்கோ தொலை தூரத்தில்....
ஆத்மார்த்தமாய்...
இதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர
ஒரே ஒரு ஜீவன் மட்டும் எப்பவும்
அழுது கொண்டிருக்கும்....
அது மட்டும் நான் அறிவேன்.....

நான் ரசித்த காதல் கவிதைகள்

என்னுடையது என்று நினைத்துத்தான்

இதுவரையில் வளர்த்து வந்தேன்.

ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே

பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நா
ய்க்குட்டி மாதிரி

உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.

* துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக
இருக்கிறது என் இதயத்திற்கு

* எனது இரண்டு
தோள்களுக்கும் இடையே

பெரும் சண்டை நடக்கிறது உன்னால்

“என்னாலா . . . என்ன சண்டை?” எனது எந்தத் தோளில்

நீ முதலில் சா
ய்வாய் என்கிற பந்தயச்
சண்டை

* எல்லோரையும்
பார்க்க ஒரு பார்வையென்றும்

என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய்.

* 'நீ ரொம்ப
அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம்
உண்மையா பொய்யா
என்று உன்
முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட
உன்னை நான்
பார்த்ததில்லை.
பார்க்கவிட்டால்தானே
உன் கண்கள்.

* என்னிடம் பரிசுப்
பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது
உன் மௌனம்.
ஆனால் உன்னைக்
காதலிக்க
ஆரம்பித்தபோதே
பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது
மனசு. எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை.

* இவை இப்படித்தான்
என்று நான்

நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய்
நீ பொய்யாக்கி
விடுகிறாய்.
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து
உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே.

* ஒரு கார்த்திகை
இரவில் அகல்
விளக்குகளுக்கு
நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ...
உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.